Wednesday, April 13, 2011

சி‌த்‌தி‌ரை‌த் ‌திருநா‌ள் வாழ்த்துக்கள்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே

ஒற்றுமையும் அன்பும் தழைத்து
கருணை, சகோரத்துவம் ஆகிய நற்பண்புகள் பெற்று
புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும் இனிதே வாழ
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என் அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு இனிய
சி‌த்‌தி‌ரை‌த் ‌திருநா‌ள் வாழ்த்துக்கள்.....





இந்தச் சித்திரைத் திருநாள் முதல் அனைவர் வாழ்விலும் நிம்மதி நிறைந்து மங்களம் பொங்க இறை அருள் புரியட்டும்….

அனைவருக்கும் சி‌த்‌தி‌ரை‌த் ‌திருநா‌ள் வாழ்த்துக்கள்.....


























Thursday, April 7, 2011

நட்பு


அம்மா வயிற்றில் சுமந்தால்,
அப்பா தோளில் சுமந்தார்,
காதலி இதயத்தில் சுமந்தால்,
நண்பா !
நான் உன்னை சுமக்கவில்லை;
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல...
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்,
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது;
மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக...
புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை,
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை !நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது...


Monday, April 4, 2011

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற கேள்வி ??


ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி’ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் “நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க’ன்னா” நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்’ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்’க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்… உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே “நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு” உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay’ ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்’ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் “என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா”ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. “உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை”ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்……..அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

Thursday, March 31, 2011

செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.

யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

- கவிப்பேரரசு வைரமுத்து 

அரசின் சாதனைகள்

கருணாநிதி அரசின் ஐந்தாண்டு சாதனைகள் :

1.ஸ்பெக்ட்ரம் மூலம் ஒருலட்சத்து எலுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் சுருட்டியது (அமெரிக்க பத்திரிக்கை வரை தமிழனை அறிமுகபடுத்தியது)

2.இரண்டு மகன்கள் ஒரு மகள் பேரன் முதலானோருக்கு பதவி

3.குடும்ப சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டது

4.ஐந்தாண்டுகளில் 634 பாராட்டு விழாவுக்கு தலைமை தாங்கியது

5.ஐந்தாண்டுகளில் ஏழு உலக புகழ் பெற்ற திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது

6.ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

7.கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்காமல் அடுத்த கட்சியினரை விலைக்கு வாங்கியது (மதிமுக கூட்டரத்தையே காலி பண்ணிய புண்ணியவான்)

8.ஒட்டு மொத்த ஊடகத்தையும் (பத்திரிக்கை ,தொலைக்காட்சி உட்பட) தன் குடும்பத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது

9.ஓட்டுக்கு பணம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கே அறிமுகபடுத்தியது

10.ஐந்தாண்டு காலம் தினம் இரண்டு மணி நேரம் கரண்ட் கட் (சென்னையை தவிர) இதுதான் மிகப்பெரிய சாதனை

11.பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையற்ற மின்சாரம் ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசு இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு

12.அரைமணி நேரம் உண்ணாவிரதம் (கின்னஸ் சாதனை இதுவரை யாரும் முறியடிக்க முடியாத சாதனை) இருந்து இலங்கை போரை நிறுத்தியதாக நாடகம் ஆடியது

13.அரசு பணத்தை செலவு செய்து கோவையில் குடும்ப மாநாடு நடத்தியது(தனது குடும்பம் மட்டும் பார்த்து ரசிக்க தனி மேடை)

14.அரசு பணத்தில் இலவச டிவி கொடுத்து கேபிள் இணைப்பை தனது பேரன்கள் மூலம் குடுத்து (சுமங்கலி கேபிள், ராயல் கேபிள்) குடும்ப வருமானத்தை பெருக்கியது

15.மனைவி, துணைவி, பெரியமகன், சின்னமகன், பேரன்கள், ஆகியோர் இடையே சண்டை சச்சரவுகள் வராமல் தமிழ் நாட்டை தனித்தனி மண்டலங்களாக பிரித்து கொடுத்தது (ஐந்தாண்டு காலம் இவர் இதற்க்கு தான் அதிக நேரம் செலவிட்டார்)

16.இலவசங்கள் கொடுத்து ஆட்சியை பிடிக்கலாம் என நிரூபித்த மேதை

இன்னும் நிறைய சாதனைகள் செய்துள்ளார் எழுதிக்கொண்டே போகலாம் தமிழக மக்களே மீண்டும் இவரை ஆறாவது முறையாக முதல்வராக்கினால் இது போல் நிறைய சாதனை செய்வார். திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர் மீண்டும் திருவாரூக்கே போகிறார் மன்னனாக..


ராமன் ஆண்டால் என்ன; ராவணன் ஆண்டால் என்ன என்பதில் என்ன பெருமை. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்பதில், நமக்கு அக்கறையில்லை என்றால், மிருகத்திற்கும், மனிதனுக்கும் என்ன வேறுபாடு? தவறான வேட்பாளருக்கு எதிராக ஓட்டளிக்காமல் ஒதுங்கி நிற்பது கூட, தவறான வேட்பாளரை ஆதரிப்பது போல் ஆவதுடன், தவறான வேட்பாளர் வெற்றி பெற பெரிதும் உதவுகிறது..

ஒரு சின்ன தகவல்..

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.

இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.

உலகம் நம்மை காரி உமிழும்